பிரதான செய்திகள்

மரிச்சுக்கட்டி 7வது நாள் போராட்டம்! சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் சந்திப்பு

முசலி பிரதேசத்தில் நில மீட்பு போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி ஆகிய கிராம மக்களை சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இன்று திங்கட்கிழமை காலை நேரில் சென்று கலந்துரையாடியுள்ளனர்.

முசலிப்பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் கபளீகரம் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி மறிச்சிக்கட்டி சக்கியா பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்ஸீம் மக்கள் இன்று திங்கட்கிழமை 7 ஆவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த மக்களையும் சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ‘சயில் செட்டி’ உள்ளிட்ட குழுவினர் நேரடியாக சென்று சந்தித்து அந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து கொண்டனர்.

இதன் போது அந்த மக்கள் தமது பூர்வீகமான குடியிருப்பு நிலங்களையும் விவசாயக்காணிகளையும் மேய்ச்சல் தரைகளையும், மேட்டு நிலக்காணிகளையும் புதிய வர்த்தமானி அறிவித்தலட மூலம் அபகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,குறித்த பகுதியில் உள்ள காணிகள் தம்முடையது உனவும்,குறித்த காணிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் தங்களிடம் இருப்பதாகவும்,அவற்றையும் குறித்த பிரதிநிதிகளிடம் காண்பித்துள்ளனர்.

எனவே முள்ளிக்குளம் மக்களின் பிரச்சினைகள் போன்று தமது பிரச்சினைக்கும் சர்வதேச மன்னிப்புச் சபை உறிய தீர்வை பெற்றுத்தர வேண்டும். என மறிச்சிக்கட்டியில் 7 ஆவது நாளாகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற முஸ்ஸீம் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹமாஸ் போராளிகள் மீது வான் தாக்குதல் மேற்கொண்ட இஸ்ரேல்

wpengine

வவுனியா கல்விக்கல்லூரியை ஆசிரிய பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அகதி முகாம்கள் தடை! ( நேரடி றிபோட் )

wpengine

வன விலங்குகள் மற்றும் இயற்கை வள அழிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

wpengine