பிரதான செய்திகள்

மரக்கறிகளை இறக்குமதி செய்வது குறித்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை-அமைச்சர் ரமேஷ் பத்திரன

மரக்கறிகளை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கத்திற்கு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ,ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஏனைய காரணிகள் மரக்கறி உற்பத்தியை பாதிக்குமாயின் அரசாங்கம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த விடயங்களில் அரசாங்கம் நேர்மையான முறையில் செயற்படுவதாகவும், மரக்கறிகளை இறக்குமதி செய்வது குறித்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்றும் கூறிய அமைச்சர், இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதிலும் கூட பாரிய அந்நிய செலாவணி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், முடிந்தவரை இறக்குமதியை மட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

முஸ்லிம்களுக்கெதிராக இனவாத தாக்குதல்! இரண்டு அரசாங்கங்களும் தவறியிருக்கின்றன

wpengine

திங்கள் கிழமை ரமழான் பண்டிகை

wpengine

6ஆவது இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி

wpengine