பிரதான செய்திகள்

மயோன் முஸ்தபா கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொண்ட ரிசாட் எம்.பி.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது, OG விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில், மர்ஹூம், மயோன் முஸ்தபா கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (04) சாய்ந்தமருது வொலிவேரியன் பொதுவிளையாட்டு மைதானத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹீர், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் கட்சியின் அதிகாரசபை உறுப்பினருமான மாஹீர், கட்சியின் பிரதி செயலாளர் நாயகம் சட்டத்தரணி அன்ஸில், உயர்பீட உறுப்பினரும், முன்னாள் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம், கட்சியின் மாவட்ட செயற்குழு செயலாளரும் உயர்பீட உறுப்பினருமான காதர், உயர்பீட உறுப்பினர் ஹமீட் ஆகியோருடன் விளையாட்டுக்கழக முக்கியஸ்தர்கள், விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்…

RishadBathiudeen #ACMCLeader #acmcparty #acmcmedia #ACMC #Sainthamaruthu #Ampara #Akkaraipathu #Karaitheevu #RBdigital

Related posts

பிரபல கவாலி பாடகர் அம்ஜத் சப்ரி மீது துப்பாக்கி சுடு

wpengine

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம் . – வடக்கில் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது .

Maash

வவுனியா மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு

wpengine