பிரதான செய்திகள்

மன்னார்,முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டம் தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை

வடபகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய பிரிவுகளு்ககு உத்தரவு வழங்கியுள்ளார்.

அதற்கு அவசியமான நிதியை உடனடியாக மாவட்ட செயலாளர்களுக்கு விடுவிக்குமாறு உரிய பிரிவுகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

வட மாகாண ஆளுநர், இராணுவ தளபதி மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இணைந்து நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேவேளை, வெள்ளம் காரணமாக ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

அவிசாவளையில் மோதல்! பதட்ட நிலைமை! மனோ கணேசன் நேரில் விஜயம்!

wpengine

வவுனியா Food City மதுபான விற்பனையில் முதலிடம்

wpengine

மன்னார்,யாழ்ப்பாணம் மாவட்டங்களில் சட்டவிரோத மண் அகழ்வு! மக்கள் விசனம்

wpengine