பிரதான செய்திகள்

மன்னார்,முசலி பகுதியில் 3 கோடி 56 இலட்சம் கேரள கஞ்சா

மன்னார், முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட காயக்குழி கிராம பகுதியில் சுமார் 3 கோடியே 56 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று இரவு இவை மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 356 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

மீட்கப்பட்ட கஞ்சாப்பொதிகள் சிலாபத்துறை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Mozilla Firefox பயண்படுத்துவோருக்கு எச்சரிக்கை

wpengine

வடமாகாண அமைச்சர் விசாரணை இன்று

wpengine

முஸ்லிம் மக்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் .

wpengine