பிரதான செய்திகள்

மன்னார்,மடுவில் கடும் மழை! பலர் அவதி

மடு பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருகின்றமையினால் நாளை இடம்பெறவுள்ள மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மடு திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா திருப்பலி நாளை காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில் ஆயர்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.

இந்த நிலையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மடு திருத்தலத்திற்கு சென்று விடுதிகளிலும், தற்காலிக கூடாரங்களையும் அமைத்து தங்கியுள்ளனர்.

 

அத்துடன், இன்று மதியம் முதல் பெய்த கடும் மழையின் காரணமாக மடுத் திருத்தலம் சார்ந்த பகுதி நீரினால் மூழ்கியுள்ளது.

இதனால் பக்தர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலிஸார் இன்று விசேட சத்தியப்பிரமாணம்.

wpengine

வன்னிக்கு தேசியப்பட்டியலா?

wpengine

”உயர உயரப் பறந்தாலும் ஊர்க் குருவி பருந்தாகாது.” குவைதிர்கானுக்கும் இது புரிய வேண்டும்.

wpengine