பிரதான செய்திகள்

மன்னார்,கரிசல் மையவாடி! 3 பேருக்கு விளக்கமறியல்

மன்னார் , கரிசல் கப்பலேந்தி புனித மாதா ஆலய காணியில் இடம்பெற்ற முருகல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதி கைதுசெய்யப்பட்ட 03 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சந்தேகநபர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மன்னார் கரிசல் கப்பலேந்தி மாதா தேவாலய காணியின் உரிமம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக மன்னார் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் தேவாலய காணி எல்லைகள் இடப்பட்டு சுற்று வேலி அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரை மன்னார் பொலிஸார் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றை அவமதித்தமை, கல்வீச்சு தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

காதலியின் நிர்வாண படங்களை பகிர்ந்த அனுராதபுரத்தைச் சேர்ந்த பிக்கு.

Maash

மர்ம நோயால் வயோதிப தோற்றம்கொண்ட சிறுவன்

wpengine

கட்டாரில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு சிக்கல்

wpengine