பிரதான செய்திகள்

மன்னார்,எருக்கலம்பிட்டி பாதைக்கு 18கோடி ரூபா ஒதுக்கீடு! தவிசாளர் நன்றி தெரிவிப்பு

மன்னார் 5ஆம் கட்டை சந்தியிலிருந்து எருக்கலம்பிட்டி நகருக்குச் செல்லும் பிரதான பாதையை நவீனமயப்படுத்தி புனரமைப்பதற்காக சுமார் 18 கோடி  நிதி ஒதுக்கப்பட்டிருப்பதற்கு மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின், வேண்டுகோளின் பேரில் நெடுஞ்சாலை வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசீம் இந்த பிரதான பாதையை நவீனப்படுத்தி புனரமைப்பதற்கும், பாதைக்கு இரு மருங்கிலும் தடுப்புச்சுவர்கள் மற்றும் கல் வெட்டுக்கள் நிர்மாணிப்பதற்குமே இந்த விசேட நிதியை ஒதுக்கியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் முக்கியமானதும் பாரம்பரிய மிக்கதுமான எருக்கல்ம்பிட்டிய கிராமத்திற்கான இந்த பிரதான பாதை நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் இருந்து வந்தது.

எனவே இதனை கருத்திக்கொண்டு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக, அமைச்சர் கபீர் காசிம் இந்த விசேட நிதியை ஒதுக்கியுள்ளார்.

அத்துடன் விரைவில் இதற்கான நிர்மாணப்பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மன்னார் பிரதேச சபைக்குற்பட்ட இந்த கிராமத்தின் பிரதான பாதையை நவீனமயப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கும் அவரது கோரிக்கைக்கு  செவிசாய்த்து நிதியை ஒதுக்கீடு  செய்த அமைச்சர் கபீர் காசிமுக்கும் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் தமது நன்றிகளை தெரிவித்துள்ளார்.

Related posts

Islamic Relief based London INGO help 1,100 families in Kolannawa, Welampitiya

wpengine

ஒரு கட்சியின் இரு மேதின கூட்டங்கள்

wpengine

தண்ணீர் குடியுங்கள்! உடலில் ஏற்படும் மாற்றம்

wpengine