பிரதான செய்திகள்

மன்னார்,அரிப்பு வீதியில் ஆட்டோ தீக்கரை! பிரதேச சபையின் அசமந்த போக்கு

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பு-சிலாபத்துறை பிரதான வீதி அல்லிராணிக்கோட்டைக்கு முன்பாக இன்று (6) செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று திடீர் என தீப்பற்றி எறிந்துள்ளதாக தெரிய வருகின்றது.

முச்சக்கர வண்டியின் உரிமையாளர் குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திக்கொண்டு சென்ற போதே திடீர் என தீப்பற்றியதாக தெரிய வருகின்றது.

உடனடியாக குறித்த முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்றவர் முச்சக்கர வண்டியில் இருந்து தப்பியுள்ளார்.

எனினும் குறித்த முச்சக்கர வண்டி முழுமையாக தீயில் எறிந்துள்ளது.

சம்பவ இடத்திற்கு வந்த சிலாபத்துறை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்படியான தீ சம்பவங்கள் இடம்பெற்றால் முசலி பிரதேச சபையில் ஒரு தீ அணைப்பு வாகனம் கூட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் வறுமையில் வாழும் அப்துல் ஹமீட்க்கு உதவி செய்யுங்கள்.

wpengine

பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்!

Editor

யாழ் போதனா வைத்தியசாலையில் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

wpengine