பிரதான செய்திகள்பிராந்திய செய்திவிளையாட்டு

மன்னார்- வவுனியா தென்னக்கோன் வெற்றிக்கிண்ணம்!

வவுனியா மற்றும் மன்னார்  அணிகளுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட்  இறுதிச் சுற்றுப்போட்டி  வன்னி பிரதி பொலிஸ்மா  அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று  நடைபெற்றது.

 

வவுனியா மற்றும் மன்னாரில் பொலிஸாரால் கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்டுவரும் நடமாடும் சேவையை முன்னிட்டு வவுனியாவில் 13  அணிகளுக்கும் மன்னாரில் 9  அணிகளுக்கும் இடையில் நடத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற இரு அணிகளுக்கும் இன்று இறுதிச்சுற்று நடைபெற்றது.

மன்னார் சென் அன்ரனீஸ் மற்றும் வவுனியா பூந்தோட்டம் அண்ணா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஐந்து ஓவர்களைக் கொண்ட இறுதிச்சுற்று போட்டியில் மன்னார் சென் அன்ரனீஸ் அணி வெற்றிபெற்று முதலாவது பரிசினை தட்டிச் சென்றது.

 

போட்டியில் வெற்றிபெற்ற சென் அன்ரனீஸ் அணிக்கு வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வெற்றிக் கிண்ணத்தையும் 25 ஆயிரம் ரூபா பணப்  பரிசினையும் வழங்கி வைத்தார்.

இரண்டாம் இடத்தினைப் பெற்ற அண்ணா கிரிக்கெட் அணியினருக்கு வெற்றிக்கிண்ணத்தையும் 15 ஆயிரம் ரூபா பரிசுத்தொகையினையும் வவுனியா மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சககர் எம்.என்.சிசிர குமார வழங்கிவைத்தார்.

நிகழ்வில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ. ஏ.மகிந்த, ரெலோ கட்சியின் இளைஞர் அணி தலைவர் ப.கார்த்திக்,  வவுனியா வர்த்தக சங்க செயலாளர் கோ.சிறிஸ்கந்தராஜா, வவுனியா பிரதேச கலாசார உத்தியோகத்தர் எஸ்.பிரதீபன், ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் வடக்கு மாகாண இணைப்பாளர் ஏபிரகாம் ராகுலன்,  பொலிஸ் அதிகாரிகள்   ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

Related posts

ஆபத்தான “செல்பி” எடுத்தால் சிறை தண்டனை

wpengine

நேர்முக தேர்வில் வவுனியா தெற்கு வலய பாடசாலை தொண்டர் ஆசிரியர்கள் விடயத்தில் பக்கசார்பு!

wpengine

அமைச்சர் றிஷாட்டின் கூட்டத்தை தடுத்து தேர்தல் திணைக்களம்

wpengine