பிரதான செய்திகள்

மன்னார்-வங்காலை மாணவனை காணவில்லை

மன்னார் வங்காலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தனது மகனான செபஸ்தியான் சாளியான் மார்க் ( சுதே ) (வயது-14) என்ற மாணவனை காணவில்லை என குறித்த சிறுவனின் தந்தை நேற்று வெள்ளிக்கிழமை மாலை வங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

கடந்த மாதம் 24 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாகவும், மன்னாரிலுள்ள கல்வி நிலையம் ஒன்றிற்கு வகுப்பிற்காக சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக வெள்ளை நீளக்கை சேட்டும் டெனிமஸ் ஜீன்ஸுசும் அணிந்திருந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் தொடர்பில் விபரம் தெரிந்தவர்கள் அல்லது அவரை எங்கும் கண்டால் 0776125880 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

கவிதை நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் றிஷாட்

wpengine

பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானம்

wpengine

ரோஹிங்கியா மக்களை ஏன் அழிக்கிறது பர்மா?

wpengine