பிரதான செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் பொலிஸ் அதிகாரிகளின் ஆதரவுடன் மணல் அகழ்வு! விலை அதிகரிப்பு வீட்டு திட்ட பயனாளிகள் கவலை

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ள போதும், வீட்டுத்திட்டத்திற்கு தேவையான மணலை பெற்றுக்கொள்ள பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக பயனாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டுள்ள நிலையில் தெரிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் வீட்டுத்திட்டத்திற்கான முதற்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

எனினும் வீட்டுத் திட்டத்திற்கு அத்தியாவசிய பொருளான மணலை பெற்றுக்கொள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், சுமார் 28ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஒரு டிப்பர் மணல் பெற்றுக்கொள்ள 35 ஆயிரம் ரூபாய் முதல் 42 ஆயிரம் ரூபாய் வரை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மணல் மண்ணுக்கான அனுமதிப்பத்திரம் ஒரு நாளைக்கு செல்லுபடியாகும் வகையில் மன்னார் பிரதேச செயலகத்தினால் மண் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படுகின்றபோதும் தூர இடங்களில் இருந்து மன்னாரிற்கு மண் கொண்டு வரப்பட்டு சேமித்து வைக்கப்பட்டு, அதி கூடிய விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் வீட்டுத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள போதும் மக்கள் தொடர்ச்சியாக மண்ணை பெற்றுக்கொள்ள பல்வேறுஅசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதே வேளை மன்னார் மாவட்டத்தில் இருந்து யாழ் மாவட்டம் உற்பட பல்வேறு இடங்களுக்கு பொலிஸார் மற்றும் அதிகாரிகளின் ஆதரவுடன் மண் கடத்தல் இடம்பெற்று வருவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

புவிச்சரிதவியல் திணைக்களம் அதிகளவான கியூப் மண் அகழ்வு செய்வதற்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குகின்றனர்.

அவர்களுடைய அனுமதிப்பத்திரத்தை அதிகளவானவர்கள் பெற்று வைத்துள்ளனர். ஆனால் ஒரு நாள் அனுமதிப்பத்திரத்தை பிரதேச செயலகத்தினூடாக சிலர் பெற்றுக் கொண்டுள்ளனர்.

எனினும் வடமாகாணத்தில் ஆறு மற்றும் மணல் மண் காணப்படுகின்ற இடமாக மன்னார் மாவட்டம் காணப்படுகின்ற போதும் மன்னார் தீவு பகுதியில் மணலின் விலை அதிகரித்து காணப்படுகின்றது.

பிரதேச செயலாளரின் ஒப்புதலோடு நீண்ட கால அனுமதிப்பத்திரத்தை வழங்குகின்ற புவிச்சரிதவியல் திணைக்களமும், ஒரு நாள் அனுமதியை வழங்குகின்ற பிரதேச செயலகமும் தமக்கு சாதகமானவர்களுக்கு மண் அகழ்வை மேற்கொண்டு விநியோகிக்க அனுமதி வழங்குவதினால் அவர்கள் பல ஆயிரம் ரூபாய் அதிகரித்த விலையில் மன்னார் மக்களுக்கு மணல் மண்னை விநியோகித்து வருகின்றனர்.

இதனால் வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொண்ட பயனாளிகள் பாதிக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தினார்.

மேலும் மன்னார் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டத்திற்கும் மண் கொண்டு செல்லப்படுவதாகவும் குறிப்பாக இலுப்பைக்கடவை, பூங்கொடியாறு, மடு, கூராய், அருவியாறு போன்ற இடங்களில் இருந்து காவல் துறையினரின் சட்ட விரோத அனுமதியோடும், உரிய அதிகாரிகளின் ஒத்துழைப்போடும், மணல் மண் வெளி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பல தடவைகள் கடிதம் மூலம் கவனத்திற்கு கொண்டு சென்ற பொதும் உரிய பலன் கிடைக்கவில்லை எனவும், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் அசமந்த போக்குடன் செயற்படுவதினாலேயே குறித்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் மேலும் தெரிவித்தார்.

Related posts

உள்ளூராட்சித் தேர்தலில் மு.கா. தனித்துபோட்டி

wpengine

ஐயூப் அஸ்மின் தான்தோன்றி தனமாக பேசுகின்றார்-ஷிப்லி பாறூக்

wpengine

NFGG இரட்டைக்கொடி சின்னத்தில் தனித்தே போட்டியிடும்

wpengine