பிரதான செய்திகள்

மன்னார் மாவட்டத்திற்கான பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடம்

மன்னார் மாவட்டத்திற்கான பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடம் நேற்று மாலை மன்னார் உயிலங்குளம் பொலிஸ் காவல் அரணில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.குறித்த பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடத்தினை வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்ணான்டோ வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

43 ஆவது பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடம் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மன்னார், வவுனியா மாவட்ட பொலிஸ் அதிகாரிகள், திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்டத்தில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களின் ஆய்வுகள் தொடர்ச்சியாக வவுனியாவில் உள்ள பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடத்தில் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒன்பது பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் இடம்பெறும் குற்றச் செயல்களின் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்ள மன்னார் உயிலங்குளத்தில் குறித்த பொலிஸ் குற்ற பரிசோதனை ஆய்வு கூடம் சுவீடன் நாட்டின் நிதி உதவியுடன் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் முயற்சியினால் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியா பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் சிரமம்

wpengine

சுதந்திர கிழக்கு! வடகிழக்கு இணைப்புக்கு எதிரான அரசின் இராஜதந்திர நகர்வா?

wpengine

விமல் தலைமையிலான அணி ஆதரவு மீண்டும் இவருக்கு

wpengine