பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்ட விலை நிர்ணய குழு கூட்டம் அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்றது.

மன்னார் மாவட்ட ஒப்பந்த வேலைகளுக்கான விலை நிர்ணய குழு கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான நந்தினி ஸ்ரான்லி டிமேல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஓப்பந்தக்காரர்களுக்கான விலை நிர்ணயங்களை இன்று(11) இக்குழு ஊடாக தீர்மானங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. இக்குழுவினால் நிர்ணயிக்கப்பட்ட விலையின் அடிப்படையிலே அரச ஒப்பந்த வேலைகளை செய்து கொள்ள முடியும்.

2022 வருடத்திற்கான விலை நிர்ணயமாகவே அமையும் இக்குழு கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர்கள் எஸ்.குணபாலன்(நிர்வாகம்) மற்றும் கே.எஸ் வசந்தகுமார்(காணி), மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எம். செல்வரத்தினம், திட்டமிடல் பணிப்பாளர் கே. மகேஸ்வரன், பிரதம உள்ளக கணக்காய்வாளர் சுரேஸ் குமார், மாவட்ட செயலக கணக்காளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் திணைக்களங்களின் பொறியியலாளர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தகாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

District Media Unit
District Secretariat Mannar

Related posts

முன்னால் அமைச்சர் றிஷாட் தொடர்ந்து வைத்தியசாலையில்! 16 வயது சிறுமியும் மரணம்

wpengine

இன மத அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்- அமைச்சர் றிசாட்

wpengine

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைந்தது!

Editor