வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்ட செயலகம் நடத்திய ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இன்று (16/07) வியாழக்கிழமை காலை 8.30 மணி அளவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு மிகவும் எளிமையான முறையில் உரிய சமூக இடைவெளியை பேணி இந்நிகழ்வு நடத்தப்பட்டது.


