பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் நியமனம்

மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலக பிரிவுகளுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதித் தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளரும் அக்கட்சியின் வன்னி மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களுக்கான முகாமையாளருமான ஏ.சமீயூ முகம்மது பஸ்மி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கான நியமனக் கடிதம் நேற்று (3) அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனம் இலங்கையின் பிரதமரும் தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம் மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வடமாகண அபிவிருத்தி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவிற்கிணங்க உள்ளக உள் நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் ஏ.சமீயூ முகம்மது பஸ்மிக்கு வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு, மன்னார் நகரம், நானாட்டான், முசலி மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதித் தலைவராக கடந்த ஜூலை மாதம் 12ம்
திகதியிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மேற்படி பதவிக்கான நியமனக் கடிதங்கள் அமைப்பாளர் ஏ.சமீயூ முகம்மது பஸ்மிக்கு உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மன்னார் மாவட்டத்தின் பிரதேச செயலக மட்டங்களில் இயங்கி வந்த பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக பிரதமரின் வேண்டு கோளுக்கிணங்க ஏ.சமீயூ முகம்மது பஸ்மி ஏலவே நியமனம் செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த நியமனங்களுக்கு பதிலாகவே தற்பொழுது ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்குமான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதித் தலைவராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வன்னி சமூர்த்தி உத்தியோகத்தர் உடனான சந்திப்பு எஸ்.பீ.திஸாநாயக்க

wpengine

டெங்கு மற்றும் கொரோனா தொடர்பில் சுகாதார பிரிவினர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!

Editor

சவுதி அரேபியா பெண்களுக்கு அடுத்த அனுமதியினை வழங்கிய மன்னர்

wpengine