பிரதான செய்திகள்விளையாட்டு

மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்

மன்னார் பள்ளிமுனை சென்-லூசியஸ் விளையாட்டுக்கழத்தினை எதிர்வரும் 6 மாதங்களுக்கு உதைப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்ளுவதற்கு மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து பள்ளிமுனை கிராம மக்கள் நேற்று வெள்ளிக்கிழமை காலை மன்னாரில் கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.

மன்னார் பள்ளிமுனை சென்-லூசியஸ் விளையாட்டுக்கழகம் கடந்த 50 வருடங்களுக்கு மேலான பழமை வாய்ந்த விளையாட்டுக்கழகமாக திகழ்கின்றது.

கடந்த 2ம் திகதி மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் இடம்பெற்ற மின் ஒளியிலான உதைப்பந்தாட்ட போட்டியின் போது பார்வையாளர்கள் நடுவர்களிடம் விளக்கம் கோரிய போது ஏற்பட்ட வார்த்தை பிரயோகத்தினால் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, பள்ளிமுனை சென்-லூசியஸ் உதைப்பந்தாட்ட கழகத்தினை எதிர்வரும் 6 மாதங்களுக்கு போட்டிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளதாக பள்ளிமுனை கிராம மக்கள் தெரிவித்தனர்.

குறித்த விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த கோல் காப்பாளர் எதுவித தவறும் செய்யாத நிலையில் அவர் மீது பொய்க்குற்றச்சாட்டை சுமத்தி அவரை ஒரு வருடத்திற்கு விளையாட தடை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பு குறித்து 07-06-2016 திகதியிடப்பட்ட கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த விளையாட்டுக்கழக வீரர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் மன்னார் பள்ளிமுனை சென்-லூசியஸ் விளையாட்டுக்கழத்தினை எதிர்வரும் 6 மாதங்களுக்கு உதைப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்ளுவதற்கு மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் தடை விதிக்கப்பட்டமையினை கண்டித்து, இன்று கண்டன ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர்.

காலை 10.30 மணியளவில் மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு மன்னார் மாவட்டச் செயலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

இதன்போது அபிவிருத்திக்கு குரல் கொடுக்கும் மன்னார் அரசியல்வாதிகளே இவ் அநீதிக்கு குரல் கொடுங்கள், எமது கழகத்தின் வெற்றிக்கு தடை விதிக்காதே, எமது விளையாட்டை வளர விடு, எமது கிராமத்தின் உயிர் மூச்சு உதைப்பந்தாட்டமே அந்த மூச்சை நிறுத்தாதே உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.625.0.560.320.500.400.197.800.1280.160.95

பள்ளிமுனை பெருக்க மரத்தடியில் ஆரம்பமான ஊர்வலம் பிரதான வீதியூடாக மன்னார் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்தது. பின் பள்ளிமுனை கிராம பிரதிநிதிகள் சிலர் மாவட்டச் செயலகத்தினுள் சென்று தமது கோரிக்கை அடங்கிய மகஜரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிடம் கையளிக்கும் வகையில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேலிடம் கையளித்ததோடு, குறித்த பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1)625.0.560.320.500.400.197.800.1280.160.95 (3)

Related posts

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தேவைகளை நிறைவேற்ற ஆர்ப்பாட்டம்

wpengine

போக்குவரத்து அபராத தொகை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்!

Editor

ஏவுகணை பரிசோதனை நடத்திய வடகொரியா! அச்சத்தில் பல நாடுகள்

wpengine