பிரதான செய்திகள்

மன்னார் மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்! பாக்கீர் அதிதி

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தைச் சேர்ந்த 83 மாணவ, மாணவிகளுக்கு நேற்று விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எவரஸ்ட் நண்பர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விருது வழங்கும் நிகழ்வு நேற்று காலை 11 மணியளவில் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்ஸிம் மத்திய மகா வித்தியாலயத்தில் எவரஸ்ட் நண்பர்கள் அமைப்பின் தலைவர் வைத்தியர் கே.அஸ்பர் தலைமையில் இடம்பெற்றது.

மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் இருந்து மன்னார் மாவட்டம் உட்பட இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் கல்வி கற்று கடந்த வருடம் இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரம், உயர் தர பரீட்சைகளில் அதிகூடிய சித்திகளை பெற்ற சுமார் 83 மாணவ மாணவிகள் சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக முன்னாள் ஊடக மற்றும் தபால் துறை அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மரிக்கார் கலந்து கொண்டார்.

விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியான், வலயக்கல்வி அதிகாரி ரி.கிரிஸ்ரிராஜா உட்பட அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் இருந்து மன்னார் மாவட்டம் உற்பட இலங்கையின் ஏனைய மாவட்டங்களில் கல்வி கற்று கடந்த வருடம் இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர, உயர் தர பரீட்சைகளில் அதி கூடிய சித்திகளை பெற்ற சுமார் 83 மாணவ மாணவிகள் குறித்த விருந்தினர்களினால் சான்றிதழ் மற்றும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்சி, இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் இணைந்து செயற்பட வேண்டும்.

wpengine

முஸ்லிம்களின் தலைவன் றிஷாட் பதியுதீன் என்பதை நிருபிக்கும் காலம் இது !

wpengine

ரோஹிங்கிய முஸ்லிம்கள்,இலங்கை முஸ்லிம்கள் குறித்தும் ஹிஸ்புல்லாஹ் பேச்சுவார்த்தை

wpengine