பிரதான செய்திகள்

மன்னார் மறை மாவட்ட ஆயரை சந்தித்த தூதுவர்

மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை, பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் சந்தித்துள்ளார்.
குறித்த விசேட சந்திப்பானது நேற்று மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது மன்னார் மாவட்ட மனித புதை குழி தொடர்பாகவும், காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் மாவட்ட மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகள் தொடர்பாகவும், இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து வரலாற்று சிறப்பு மிக்க மடு அன்னையின் திருத்தலத்திற்கு உயர்ஸ்தானிகர் விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

மீண்டும் ஈரானின் ஜனாதிபதியானார் ருஹானி!

wpengine

2022ஆம் ஆண்டுக்கான தனது பணிகளை ஆரம்பித்தது மன்னார் மாவட்ட செயலகம்

wpengine

முன்னால் அமைச்சர் நாமல் 70 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தினாரா?

wpengine