செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் மக்களுக்கு வெள்ள அனர்த்த சீனா நிவாரணம் .!

மன்னார் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு , சீனாவின் ‘சகோதர பாசம்’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இன்று (10) நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வானது மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள துள்ளு குடியிருப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

கட்டுக்காரன் குடியிருப்பு மற்றும் துள்ளுக்குடியிறுப்பு பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பின் தங்கிய குடும்பங்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது, இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன் வெய் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வைத்தார். இதன்போது 350 குடும்பங்களுக்கு தலா 6490 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன்,மன்னார் பிரதேசச் செயலாளர்.எம்.பிரதீப் மற்றும் சீன தூதரகத்தின் உயரதிகாரிகள் துறைசார் அதிகாரிகள் என கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை நேற்றையதினம் முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா உலருணவுப் பொதிகள் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து சர்வதேசத்துக்கு அலி சப்ரி விளக்கம்!

Editor

ரஷ்ய இராணுவத்தில் ஜனவரி 20ஆம் திகதி வரை இலங்கையர்களில் 59 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

Maash

சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் சுதந்திர தினம் அனுஷ்டிப்பு!

Maash