அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மன்னார், பூநகரி, தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் 24 – 27 வரை ஏற்றுக்கொள்ளப்படும்,.

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டி பிரதேசசபைகளுக்கான வேட்புமனுக்கள் இம்மாதம் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், இன்று திங்கட்கிழமை (10) முதல் அவற்றுக்கான கட்டுப்பணத்தை செலுத்த முடியும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2025ஆம் ஆண்டு முதலாம் இலக்க உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சட்டத்தின் (262ஆம் உறுப்புரை) 26ஆவது பிரிவின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய இந்த அறிவித்தல் வெளியிடப்படுகிறது.

அதற்கமைய கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசசபை, மன்னார் மாவட்டத்தின் மன்னார் பிரதேசசபை மற்றும் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டி பிரதேசசபை ஆகியவற்றுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வேட்புமனு குறித்த அறிவித்தல் இன்று வெளியிடப்படுகிறது.

அத்துடன், 2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் கட்டுப்பணம் பௌர்ணமி , சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய திகதிகளில் (எதிர்வரும் 13, 15, 16, 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் ) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. 

இம்மாதம் 24ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவினால் முதலாவது வேட்புமனு பத்திரம் மற்றும் இரண்டாவது வேட்புமனு பத்திரத்தில் சேர்க்கப்பட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை, அவற்றில் உள்ளடக்கப்பட வேண்டிய ஆகக் குறைந்த இளைஞர் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கை மற்றும் கட்டுப்பணம் குறித்த தகவல்கள் கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/EuAtDr7KEaH0ADVKTTsbGK

Related posts

எம்.பி பதவியைக் கொடுத்து சமாளிக்கும் முயற்சியா?

wpengine

பழைய முறையிலா,புதிய முறையிலா தேர்தல் கட்சியில் குழப்பம்.

wpengine

மன்னார் சவேரியார் தேசிய பாடசாலை மாணவன் முதலிடம்

wpengine