பிரதான செய்திகள்

மன்னார் பிரதேச செயலக வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் அநீதி!அதிகாரிகள் உரிய பதில் வழங்குவதில்லை

மன்னாரில் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து நான்கு குடும்பப்பெண்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பெண்கள் மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று காலை முதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

எமக்கு வீட்டுத்திட்டம் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் இது வரை கூறப்படவில்லை. இந்த வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொள்ள 6 வருடங்கள் காத்திருந்தோம்.

3 வருடங்கள் தொடர்ச்சியாக வீட்டுத்திட்டம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தோம். தற்போது புள்ளிகள் அடிப்படையில் கிடைக்கப்பெறும் வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொள்ள 3 மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றோம்.

 

வீட்டுத்திட்டம் தொடர்பில் மன்னார் பிரதேசச் செயலகத்திற்கு சென்றால் அங்குள்ள அதிகாரிகள் எமக்கு உரிய பதில் வழங்குவதில்லை. அத்துடன் எங்களிடம் அதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.

ஏற்கனவே வீட்டுத்திட்டம் கிடைப்பதற்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, பயனாளிகள் தெரிவில் எமது பெயர் விபரங்கள் உள்வாங்கப்பட்டு, பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், தற்போதைய பெயர் பட்டியலில் எமது பெயர் நீக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயத்தில் மன்னார் பிரதேச செயலாளர் அசமந்த போக்குடன் நடந்து கொள்கிறார் என அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வந்த மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மெல் குறித்த பெண்களுடன் கலந்துரையாடி, அவர்களை பிரதேச செயலாளரிடம் அழைத்துச் சென்றார்.

எனினும் குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவுகள் திருப்தி இல்லாத காரணத்தினால் அந்த பெண்கள் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக மன்னார் பிரதேச செயலாளர் என்.பரமதாசனிடம் வினவிய போது,

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் வீட்டுத்திட்ட பயனாளிகள் உரிய முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பேஸ்புக் விடயத்தில் சட்டத்தை மீறிய ரணில்,மைத்திரி

wpengine

அமைச்சரவை மாற்றத்தில் உயர்கல்வி அமைச்சராக மீண்டும் எஸ்.பி. திஸாநாயக்க!

Editor

இணையதள போலி செய்திகளுக்கு எதிராக புதிய சட்டம்- அமைச்சர் சரத் வீரசேகர

wpengine