பிரதான செய்திகள்

மன்னார் பிரதேச சபை தவிசாளரின் கவனத்திற்கு! பிரதேச சபை நடவடிக்கை எடுக்குமா

மன்னார்,மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் ஊடாக நானாட்டான் செல்லும் பிரதான சந்தியில் உள்ள பயணிகள் தங்குமிடம் சேதமுற்ற நிலையில் உரிய பராமறிப்பு இன்றி காணப்படுவதினால் அப்பகுதியில் போக்குவரத்திற்காக காத்திருக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மன்னார் பிரதேச சபையின் பிரிவின் கீழ் உள்ள குறித்த பயணிகள் தங்குமிடத்தின் மேல் கூரைகள் உடைந்து சேதமான நிலையில் காணப்படுவதோடு, உரிய பராமறிப்பு இன்றி தூய்மை அற்ற நிலையில் காணப்படுகின்றது.

இதனால் குறித்த கிராமத்தில் இருந்து போக்குவரத்திற்காக காத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் , வயோதிபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என உற்பட அனைவரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

மக்கள் குறித்த பயணிகள் தங்குமிடத்தில் நின்றே பேரூந்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

தற்போது மழைக் காலம் என்பதினால் பயணிகள் பல்வேறு சௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறித்த பயணிகள் தங்குமிடம் சேதமடைந்து பல மாதங்கள் ஆகியும் மன்னார் பிரதேச சபை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வில்லை என மக்கள்; விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இவ்விடையத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சமநிலையில் இலங்கை ,இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி

wpengine

வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

wpengine

இந்துகள்,கத்தோலிக்கர்கள் பிரிந்து போட்டியிடுவது தற்கொலைக்கு சமம்

wpengine