பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் பிரதேச சபை ஒரு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டமானது இன்றைய தினம் திங்கட்கிழமை (27) காலை 10.30 மணியளவில் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.முஹாஜிர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிலையில், சபையின் தவிசாளரினால் வரவு செலவுத் திட்டம் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன் போது தமிழ்தேசிய கூட்டமைப்பு 7 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 2 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர்களுமாக மொத்தம் 11 உறுப்பினர்கள் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக்கூட்டனி உறுப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் தலா ஒருவர் வீதம் 2022 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

வரவு செலவு திட்டத்திற்கு எதிராக ஒரு மேலதிக வாக்கு வித்தியாசத்தில் இவ் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

மர்ஹூம் அலவி மௌலானாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது – அமைச்சர் றிசாத்

wpengine

பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன

wpengine

அமைச்சர் றிஷாட்டிடம் தோற்றுப்போன வை.எல்.எஸ். ஹமீட்

wpengine