பிரதான செய்திகள்

மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு கருப்புக்கொடி

மன்னார் நிருபர்

(22-04-2019)

நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இன்று திங்கட்கிழமை காலை மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களுக்கு முன் கறுப்புக் கொடி ஏற்றி தமது அனுதாபங்களையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்று திங்கட்கிழமை(22) மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் திறக்கப்பட்டு சிறிது நேரத்தில் மூடப்பட்டது.

மேலும் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமது வர்த்தக நிலையங்களுக்கு முன் கருப்புக்கொடிகளை பறக்கவிட்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இதே வேளை மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் நகர சபை உறுப்பினர்கள் சிலர் மன்னார் பஸார் பகுதியில் கருப்புக்கொடிகளை கட்டி தமது கண்டனத்தையும்,துக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மன்னார் பஸார் பகுதியில் கட்டப்பட்டுள்ள அனைத்து கருப்புக் கொடிகளையும் உடனடியாக அகற்ற சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உத்தரவிட்டதோடு ஒரு சில கொடிகளையும் கலட்டிச் சென்றுள்ளனர்.

இதன் போது போது வர்த்தகர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.இந்த நிலையில் பொலிஸார் அங்கிருந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ் பகுதியில் மகனுக்கும் தாய்க்கும் இடையே முரண்பாடு – வீட்டுக்கு மகன் போகாததால் தாய் விரக்தியில் மரணம் .

Maash

என்னை அரசியலில் இருந்து ஒரங்கட்ட பல முனை அம்புகள்,தொடர் சதிகள்,கொடும்பாவிகள் கூட அமைச்சர் றிஷாட்

wpengine

அமைச்சர் ஹக்கீம் தலைமையில்இன்று நிவாரண பணி (படங்கள்)

wpengine