பிரதான செய்திகள்

மன்னார் நீதவான் அலெக்ஸ்ராஜா படுகாயம்! அவசர சிகிச்சைப்பிரிவில்

யாழ்ப்பாணம்-மன்னார் பிரதான வீதியில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை இரவு இடம் பெற்ற விபத்தில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி தனது வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை வீதியில் நீதவானின் வாகனம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த போது வீதிக்கு குறுக்காக மாடுகள் சென்ற நிலையில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இதன் போது காயமடைந்த நீதவானை உடனடியாக இலுப்பைக்கடவை பொலிஸார் மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மன்னார் பொது வைத்தியசாiலின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் நீதவானின் பாதுகாப்பிற்காக சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்து குறித்த மேலதிக விசாரனைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாமல் எம்.பி உட்பட 4 பேருக்கு எதிரான வழக்கு , நீதிமன்ற உத்தரவு .

Maash

சஜித்துடன் இணைவும் சந்திரிக்கா,குமார வெல்கம

wpengine

ஆணைக்குழுவின் மூலம் பல்கலைகழகம் சென்ற மன்னார் மாணவன்

wpengine