பிரதான செய்திகள்

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் எலும்புக்கூடுகள்

மன்னாரில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பகுதியை மன்னார் மாவட்ட நீதவான் நேற்று இரண்டாவது நாளாகவும் நேரில் சென்று பார்வையிட்டார்.

மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் இருந்த கட்டிடம் உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

குறித்த பகுதிக்கு சென்ற மாவட்ட நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, மீட்கப்பட்ட மனித எலும்புகளையும் பார்வையிட்டுள்ளார்.

களனி பல்கலைக்கழக பேராசிரியர் பத்மதேவா, விசேட சட்ட வைத்திய நிபுணர், சட்டத்தரணிகள், விசேட தடயவியல் நிபுணத்துவ காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிளும், நீதவானுடன் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை பார்வையிட்டுள்ளனர்.

எனினும், நேற்றைய தினம் எந்தவித அகழ்வு பணிகளும் இடம் பெறவில்லை.

இந்த நிலையில், அகழ்வு மற்றும் ஆய்வுப் பணிகளை எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 8.00 மணிக்கு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜெயலலிதா மறைவு! அதிர்ச்சியில் 19 பேர் பலி

wpengine

ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலுக்கு! பொறுப்பு கூற வேண்டிய மைத்திரி பொதுஜன பெரமுனவின் தவிசாளர்.

wpengine

வட்அப்,பேஸ்புக் தடை நள்ளிரவுடன் நீக்கம்

wpengine