செய்திகள்மன்னார்

மன்னார் நகர சபையின் செயற்பாட்டால் போக்குவரத்து சேவைகள் பாதிப்பு..! MANNAR NEWS

மன்னார் நகர சபையின் ஊடாக பண்டிகைக் கால தற்காலிக வியாபார நிலையங்கள் பகிரங்க குத்தகைக்கு விடப்பட்ட நிலையில், அதற்குரிய வாகன தரிப்பிட வசதிகள் எவையும் மன்னார் நகர சபையால் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக மன்னார் நகர மத்தியிலுள்ள பேருந்து நிலைய வளாக பகுதியில் பண்டிகைக் கால தற்காலிக வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமையால் அங்கு கூடும் மக்களின் வாகனங்கள் மத்திய பேருந்து நிலைய பகுதியில் தரித்து நிற்பதால் தனியார் மற்றும்  இ.போ.ச பேருந்துகள் தமது சேவையினை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, பேருந்து நிலையத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளின் சாரதிகளும் தமது சேவையினை முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினரால் மன்னார் நகர சபை செயலாளரிடம் தொலைபேசி மூலம் தெரியப்படுத்திபோது,

குறித்த பிரச்சினை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு செயலாளர் பதிலளித்துள்ளார் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

அதேவேளை குறித்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி மன்னார் நகர சபையிடம் கடிதம் மூலமாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,மன்னார் மத்திய பேருந்து நிலையமானது அரச மற்றும் தனியார் பேருந்துகள் இணைந்து சேவைகளை முன்னெடுக்கும் பகுதியாக காணப்பட்டுவரும் நிலையில் வியாபார நிலையங்களுக்கு வரும் மக்களால் விபத்துக்கள் ஏற்படும் ஏதுநிலையும் உருவாகியுள்ளது.

அதேவேளை, மாதந்தோறும் மன்னார் நகர சபையினரால் அரச மற்றும் தனியார் பேருந்து சபைகளிடம் இருந்து பேருந்து நிலைய கட்டணங்களை அறவிடப்படும் நிலையிலும், குறித்த பேருந்து சேவைகளை பாதுகாப்பாக முன்னெடுப்பதற்குரிய சூழலை மன்னர் நகர சபை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமெனவும் பேருந்து சாரதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

Govpay திட்டம் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் ஆரம்பம்.!

Editor Siyath

77 ஆவது சுதந்திரதின நிகழ்வு மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது!!!

Editor Siyath

தமது அடையாளத்துடன், சமத்துவமாக வாழும் சூழலை ஏற்படுத்த சகலரும் முன்வரவேண்டும். றிசாட் எம் . பி .

Editor Siyath