பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் தந்தை செல்வாவின் சிலைக்கு முன்னால் நிகழ்வு

தந்தை செல்வநாயகத்தின் 121வது பிறந்த தினம் மன்னாரில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில், மன்னார் நகர சபை உறுப்பினர் திருச்செல்வம் சந்திரன் தலைமையில், மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு முன்பாக குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டுள்ளதுடன்,பொது மக்கள்,சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது தமிழ் சேதசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபையின் தலைவர் ஞா.அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச தலையின் தலைவர் திருச்செல்வம் பரஞ்சோதி,மன்னார் நகர சபையின் உப தலைவர் எஸ்.எஸ்.ஜாட்சன்,வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துக் கொண்டு சிறப்பித்துள்ளனர்.

Related posts

ஜிந்தாவுக்கான புதிய consulate general சந்தித்த ஹிஸ்புல்லாஹ்

wpengine

வாகன மோசடி! முசம்மில் நிதி மோசடி விசாரணை பிரிவில்

wpengine

பொதுபல சேனாவை பாலூட்டி வளர்த்தவர்கள் அமைச்சுக்களை அலங்கரிக்கின்றனர்

wpengine