பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு தீப்பற்றயுள்ளது.

நாட்டில் பல இடங்களில் எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயு கொள்கலன்கள் வெடிப்பு சம்பவம் பதிவாகி வருகின்றது.

இதனால் மக்கள் எரிவாயு அடுப்புகளை கொள்வனவு செய்வதில் தயக்கம் காட்டிவருகின்றனர்.

மன்னார் சாந்திபுரம் பகுதியில் வீடு ஒன்றில் எரிவாயு அடுப்பு தீப்பற்றி எரிந்துள்ளது. 

இச் சம்பவம் நேற்று (04) இரவு 10 மணி அளவில் நடந்துள்ளது.

கடந்த வாரம் கொள்முதல் செய்யப்பட்ட எரிவாயு கொள்கலன் ஊடாக இரவு நேர சமையல் மேற்கொண்ட நிலையில் திடீரென அடுப்பு முழுவதும் தீ பற்றியதுடன் சிறிது நேரத்தில் அடுப்பு முற்று முழுதாக வெடித்ததாகவும் உடனடியாக சிலிண்டரை அப்புறப்படுத்தியமையால் பாரிய தீ விபத்து ஒன்று தடுக்கப்பட்டதாகவும் உரிய வீட்டார் இதன்போது தெரிவித்துள்ளனர்.  

Related posts

மரணித்த ஐந்து முஸ்லிம்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளது.

wpengine

ஆசிரியரை பந்தாடிய மாணவிகள் (வீடியோ)

wpengine

அச்சுவேலி நெசவுசாலையை கைப்பற்றி அடாவடித்தனம் செய்பவர்களை வெளியேற்றுமாறு கோரி போராட்டம்!

Editor