பிரதான செய்திகள்

மன்னார் சமூக பொருளாதார நிறுவனத்தினால் உதவி

மன்னார் சமூக பொருளாதார நிறுவனத்தினால் 25இலட்சம் பெறுமதியான வெள்ள நிவாரண பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வட பகுதியில் உள்ள முல்லைதீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனேகமான மக்களுக்கு அரசாங்கம் மற்றும் தொண்டு அமைப்புக்கள் என பலரும் வெள்ள நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெரிதும் வெள்ள நிவாரண பொருட்கள் கிடைக்க பெறாத கிராமங்களான உழவனூர் நாதன் குடியிருப்பு, இராமனாதபுரம், புலுதியாறு ஆகிய கிராமங்களில் உள்ள 700 குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் மன்னார் சமூக பொருளாதர மோம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஒத்துழைப்பிற்கு அமைவாக தெரிவு செய்யப்பட்ட குறித்த கிராமங்களுக்கான பொருட்கள் மன்னார் சமூக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜாட்சன் தலைமையில் உரிய மக்களிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிவாரணங்களை வழங்கும் நிகழ்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள், கிராம சேவகர் மற்றும் பிரதேச சபை உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டு சுமார் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்து வழங்கி வைத்தனர்.

Related posts

மன்னார் நகர பிரதேச செயலகம் முற்றுகை! போக்குவரத்து பாதிப்பு

wpengine

ஐ.பி.எல் போட்டிகளில் லசித் மாலிங்க கலந்து கொள்வதில் சந்தேகம்

wpengine

சிங்கலே என்ற கொடியுடன் பதற்றம் (விடியோ)

wpengine