பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்-சமுர்த்தி கணனி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த மன்னார் அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மெல்

நேற்று 24/02/2021 நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட, முருங்கன் சமுர்த்தி வங்கியின் கணனிமயப்படுத்தப்பட்ட வங்கிச்சேவை அங்குராப்பண நிகழ்வு, நானாட்டான் பிரதேச செயலாளர் ம.சிறிஸ்கந்தகுமார் தலைமையில்நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு.பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங் அதிபர் மதிப்பிற்குரிய திருமதி ஸ்ரான்லி டி மெல் அவர்கள் கலந்து கொண்டு கணனி மயப்படுத்தப்பட்ட வங்கிச் சேவையை ஆரம்பித்து வைத்தார்.

மற்றும் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் மதிப்பிற்குரிய திரு, I.அலியார்,மாவட்ட திட்டப்பணிப்பாளர் , திரு,.K,மகேஸ்வரன் மாவட்ட பிரதம கணக்காளர், திரு,.M.செல்வரத்தினம் மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் திரு.K.சுரேஸ்குமார் மற்றும் பிரதேச செயலக கணக்காளர்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர்.சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ,சமுர்த்தி பயனாளிகள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்ததார்கள். இந்நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு வங்கி குழுமத்தால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

மன்னார் மாவட்டத்திற்கு புதிய அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட பணிப்பாளரின் வருகையின் பின்பு சமுர்த்தி திணைக்கள வேலைத்திட்டத்தில் அதிகமான அபிவிருத்தி பணிகள் நடைபெற்று வருவதுடன்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழில் ரீதியாக கடந்த காலத்தில் எதிர்நோக்கிய பிரச்சினைகளை கூட தீர்த்துவைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருக்கின்றார்கள்.

Related posts

தேசிய கொள்கையொன்றை உருவாக்குமாறு கோரி சத்தியாகிரகப் போராட்டம்

wpengine

ரஷ்யா- உக்ரைன் ஐ.நா. தீர்மானம்! இலங்கை புறக்கணிப்பு

wpengine

இந்தியா-இலங்கை கூட்டாண்மை எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியம், இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவிப்பு . !

Maash