பிரதான செய்திகள்

மன்னார் சதொச வளாகத்தில் மீண்டும் அகழ்வு பணிகள்!

மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று 11ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் குறித்த அகழ்வு பணியை மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்ரர் சோசை ஆகியோர் இன்று காலை நேரடியாக சென்று பார்வையிட்டுள்னர்.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெறும் இந்த அகழ்வு பணிகள் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினராலும், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், அகழ்வு நடவடிக்கைகளின் போது தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வரும் இந்த மனித எலும்புகளின் பிண்ணனியில் மர்மம் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிவசக்தி ஆனந்தனின் செயலாளரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணை.

wpengine

அநுர அரசிடம் மைத்திரி விடுத்துள்ள கோரிக்கை…!

Maash

மன்னார் மாவட்டத்தில் நேற்றையதினம் மேலும் 3 கோவிட் மரணங்கள்

wpengine