பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார் கையெழுத்து வேட்டை முதலமைச்சரிடம் ஒப்படைப்பு! தீர்வு கிடைக்குமா?

மன்னாரின் எழுச்சி அதுவே எங்களின் முயற்சி’ எனும் கருப்பொருளில் மன்னார் மாவட்ட தமிழமுது நண்பர்கள் வட்டம் ஏற்பாட்டில் செய்திருந்த கையொழுத்து வேட்டை நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் இயக்குனர் வை.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்ட தமிழமுது நண்பர்கள் வட்டம் ஏற்பாடு செய்திருந்த கையொழுத்து வேட்டை கடந்த 2 ஆம் திகதி ஆரம்பமாகி நிறைவடைந்துள்ளது.

 

மன்னார் மாவட்டத்திற்கு வரவேற்பு கோபுரம் அமைக்கப்பட வேண்டும்.மணிக்கூட்டுக்கோபுரம் அமைக்கப்பட வேண்டும். மின் சமிக்கை விளக்குகள் பொருத்துதல்.

மன்னார் பொது நூலகத்தை சிறப்பாக உருவாக்குவதோடு,கிராமப்புறங்களில் உள்ள நூலகங்களை தரமுயர்த்தவேண்டும்.மாவட்டத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குறித்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டது.

 

இந்த கையெழுத்து வேட்டை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் கையெழுத்துக்களுடன் கோரிக்கை அடங்கிய மகஜர் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், இ.சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய உள்ளிட்ட அதிகாரிகள் பலருக்கு நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளதாக தமிழமுது நண்பர்கள் வட்டத்தின் இயக்குனர் வை.கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நுவரெலியா மாவட்ட சிறுபான்மையின மக்களுக்கு அநீதி! அமீர் அலி நடவடிக்கை

wpengine

மன்னார் பிரதேச செயலக வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் அநீதி!அதிகாரிகள் உரிய பதில் வழங்குவதில்லை

wpengine

உதய கம்மன்பிலவை சந்தித்த ஞானசார

wpengine