பிரதான செய்திகள்

மன்னார் கல்வி வலய ஆசிரியர் மாநாட்டின் ஓர் அங்கமான கண்காட்சி

மன்னார் கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு நேற்று (14) மன்னாரில் ஆரம்பமாகிய நிலையில் இன்று(15) புதன்கிழமை காலை மன்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் கண்காட்சி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி செலின் சுகந்தி செபஸ்ரியன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் முதலில் வித்துவம் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.

மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி செலின் சுகந்தி செபஸ்ரியன் குறித்த நூலினை வைபவரீதியாக வெளியீடு செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லா இணைந்து விருது வழங்கி வைத்ததோடு கண்காட்சியையும் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளார்.

625.0.560.320.500.400.197.800.1280.160.95 (8)

குறித்த நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டதோடு மன்னார் கல்வி வலயத்திலுள்ள சுமார் 1539 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.625.0.560.320.500.400.197.800.1280.160.95 (5)625.0.560.320.500.400.197.800.1280.160.95 (6)

Related posts

காபந்து அரசாங்கத்தை நியமிக்க ஆலோசனை -விமல்

wpengine

இருத்தலுக்கான இறுதி விளிம்பில் ஜெனீவாக் களம்!

wpengine

அமைச்சர் ரிஷாட்டின் வேண்டுகோளை ஏற்று ஒலுவில் கடலரிப்புக்கு நடவடிக்கை.

wpengine