பிரதான செய்திகள்

மன்னார்-கட்டுக்கரையில் சடலம்

மன்னார் முருங்கன் கட்டுக்கரைக்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை நேற்று வியாழக்கிழமை காலை முருங்கன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

 

சிதைவடைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக முருங்கன் பொலிஸாருக்கு பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில்  சம்பவ இடத்திற்கு விரைந்த முருங்கன் பொலிஸார் குறித்த சடலத்தை மீட்டள்ளனர்.

 

மீட்கப்பட்ட சடலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதோடு, சடலத்திற்கு அருகில் கைப்பை மற்றும் கையடக்கத்தொலைபேசி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 

சடம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் யாருடையதென்பது தொடர்பில் இது வரை  கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் சடலம் தொடர்பில் முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மறிச்சுக்கட்டி, கரடிக்குளி முஸ்லிம்களின் காணிகளைப் பாதுகாக்க முன்வரவேண்டும்.

wpengine

நாமல் எதாவது பிரச்சினையா? மைத்திரி கேள்வி!

wpengine

தேர்தல் வாக்களிப்பு நேரத்தில் மாற்றம்.

wpengine