பிரதான செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் ஒரே வகையான மீன்கள்

மன்னார் கடற்பரப்பில் ஒரே வகையான மீன்கள் பெருந்தொகையில் வலையில் சிக்குவதால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக ஒரேவகையான மீன் சுமார் 25000 கிலோவுக்கும் அதிகமாக கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

போல்லு என்ற மீன் இனம் ஒன்று பாரிய அளவில் சிக்குவதால் வருமானம் சடுதியாக அதிகரித்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீன் ஒரு கிலோ 150 ரூபாய் முதல் 200 ரூபாவுக்கு மன்னாரில் விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் ஒரே வகையான மீனினம் கிடைப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதிகளவான வருமானம் கிடைப்பதாகவும் மீனவர்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளனர்.

ஏனைய நாட்களை விடவும் இது மாறுபட்ட சாதக தன்மை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக மீன்பிடியில் ஈடுபடும் போது கடலில் கழிக்கும் நேரத்தை விடவும் இரண்டு மடங்கு குறைவான நேரத்தில் இந்த மீன் சிக்குவதனால் விரைவாக கரைக்கு திரும்ப முடிவதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மீன் தொடர்பில் இந்திய மீனவர்களுக்கு தகவல் கிடைத்தால், அவர்கள் ட்ரொலி இயந்திரத்தில் வருகைத்தந்து மீன்களை பிடித்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என மன்னார் மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Related posts

மீண்டும் ஒரு இராஜாங்க அமைச்சர் பதவி விலகல்! காரணம் வெளியாகவில்லை

wpengine

துப்பாக்கி ரவைகளால் வீழ்த்தப்படாத சிரிய ஈமானியம்

wpengine

யானை, மனித மோதல் மிகவும் உக்கிரமடைந்த நிலையில் பொன்சேகா

wpengine