செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

மன்னார் அனர்த்த நிவாரண சேவைகள் சுற்றறிக்கை, மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பான கலந்துரையாடல்.

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களிற்கான முன்னேற்ற மீளாய்வு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட 01/2025ஆம் இலக்க அனர்த்த நிவாரண சேவைகள் சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பான கலந்துரையாடலானது மாவட்ட செயலாளரின் தலைமையில் 2025/02/05 ஆம் திகதி மாவ‌‌ட்ட செயலாளரின் மாநாட்டு மண்டபத்தில் காலை 10 .00மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது .

இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலாளரினால் கடந்த கால வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களிற்கான உதவிகள் குறித்து வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மிக்க சேவைகளிற்காக நன்றியினையும் பாராட்டுக்களையும் கூறினார்.

மேலும் அனர்த்த காலங்களின் போது நிவாரணம் வழங்குவதற்காக 01/2025 ஆம் திகதிய சுற்றறிக்கைக்கும் மற்றும் வழிகாட்டல் தொடர்பாக சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களிற்கு தெளிவுபடுத்தப்பட்டது.

Related posts

ஹக்கீமை போன்று றிஷாட் நடந்துகொள்ள கூடாது! புத்தளத்தில் நாகரீகம் தவறிய ஹக்கீம்

wpengine

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் 04 மாகாணங்கள் பாதிப்பு!

Editor

கிளிநொச்சியில் அமையவுள்ள வடகிற்கான விசேட மகப்பேற்று பெண்ணோயியல் மையமும் பறிபோகும் ஆபத்து

wpengine