பிரதான செய்திகள்

மன்னாருக்கு பிரதமர் வருகை அமைச்சர் றிஷாட் தலைமையில் விசேஷட ஆலோசனைக் கூட்டம்

(வாஸ் கூஞ்ஞ)

சுமார் 275 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடமான மன்னார் மாவட்ட செயலகத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறப்பதற்கான சகல ஆய்த்தங்களும் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19.05.2017) காலை திறக்கப்பட இருக்கும் இவ் புதிய கட்டிட திறப்பு விழா சம்பந்தமாகவும் பிரதமரின் மன்னார் விஐயம் சம்பந்தமான ஒழுங்குகளை மேற்கொள்ளும் விடயமாக  வர்த்தகம் மற்றும் வாணிபத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக  றிசாட் பதியுதீன் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ் தேசப்பிரிய, மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரனி டீ மெல் உட்பட திணைக்கள உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் ஏற்பாடுகள் சம்பந்தமாக கலந்தாலோசிக்கப்ட்டன.

இதற்கமைய தற்பொழுது மன்னார் மாவட்ட செயலாளர் எம்.வை.எஸ் தேசப்பிரிய மேற்பார்வையில் திறப்பு விழாவுக்கான சகல ஆய்த்தங்களும் பூர்த்தி அடையும் நிலையில் காணப்படுகின்றன.

Related posts

வட கொரியாவை அடையாளம் தெரியாமல் ஆக்குவேன்! டிரம்ப்

wpengine

ஐக்கிய தேசிய கட்சியுடன் கொடுக்கல் வாங்கல் இல்லை

wpengine

சஜித் பிரேதமதாச வடக்கு கிழக்கில் கட்சியை பலப்படுத்தும் விடயத்தில் உறுதியாக உள்ளார்.

wpengine