பிரதான செய்திகள்

மன்னாரில் வேட்பாளர்கள் அறிமுகம்

மன்னாரில் தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டமானது நகர சபையின் முன்னாள் உப தலைவரும் மன்னார் நகர சபை வேட்பாளருமான ஜேம்ஸ் ஜேசுகாதஸ் தலைமையில் நேற்று காலை மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் நான்கு
உள்ளூராட்சி மன்றங்களிலும், தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் சார்பாக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகம் இடம்பெற்றுள்ளது.

இதில் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஜனநாயக தமிழரசுக் கட்சியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

பேஸ்புக் பிரதிநிதிகள் நாளை இலங்கை நோக்கி பயணம்

wpengine

மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனம்

wpengine

சர்வகட்சி மாநாடு!பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடல்ஆலோசனை

wpengine