பிரதான செய்திகள்

மன்னாரில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன விடுதலை புலிகளின் ஆயுதங்களா? சந்தேகம்

மன்னார், சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று மாலை வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சாந்திபுரம் புகையிரதக் கடவைக்கு அருகில் உள்ள பற்றைக்குள் மர்மமான இரண்டு பொதிகளை அவதானித்த நபர் ஒருவர் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பொதிகளை பார்வையிட்டதோடு, சோதனையிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த பொதியில் இருந்து சக்தி வாய்ந்த சி-4 வெடி மருந்துகள் மற்றும் டெற்றனேற்றர் குச்சுகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து வெடிப்பொருட்கள் படையினரினால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

Related posts

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி -ஜனாதிபதி

wpengine

விளையாடிக்கொண்டிருந்த நபர் மீது கோல் கம்பம் வீழ்ந்ததில் பரிதாபமாகப பலி .!!!

Maash

பெண்கள் மிகவும் ராஜபக்சக்களை நேசிக்கின்றார்கள்”

wpengine