பிரதான செய்திகள்

மன்னாரில் விஷேட சத்திர சிகிச்சை நிலையம் திறந்து வைத்த அமைச்சர்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அதி நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்ட விசேட சத்திர சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையம் சுமார் 12 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இன்று காலை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசிலனால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான அதி நவீன வசதிகளுடன் கூடிய ‘நடமாடும் பற்சிகிச்சை சேவை வாகனம்’ ஒன்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து எம்.ரூத்திரன் என்பவரால் வடமாகாண சுகாதாரஅமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த ‘நடமாடும் பற்சிச்சை சேவை வாகனம்’ மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கில் றோயிடம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் போது இடம் பெற்ற நிகழ்வில் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்ட எம்.ரூத்திரன் உள்ளிட்ட அதிதிகள் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வுகளில் மன்னார் பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கில்றோய், மன்னார் வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர் வைத்தியர் ஒஸ்மன் டெனி, வைத்தி நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி சொல்வதொன்று செய்வதொன்று- இது வரை இனப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை!மனோ சாடல்

Editor

கா.பொ.த. (உ/த)  பரீட்சை! பர்தா விடயத்தில் இடை­யூ­று­கள் விளை­விக்க வேண்டாம்

wpengine

எகிப்து மசூதியில் துப்பாக்கி சூடு! 230பேர் பலி

wpengine