பிரதான செய்திகள்

மன்னாரில் மூன்றாவது முறை உடைக்கப்பட்ட பிள்ளையார்!இந்துக்கள் விசனம்

மன்னார்-யாழ் பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடுபாதைக்கு முன் பகுதியில் அமைந்திருந்த பிள்ளையார் சிலை கடந்த திங்கட்கிழமை இரவு இனம்தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

 

தள்ளாடி இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள விமான ஓடு பாதைக்கு முன், வீதி ஓரத்தில் பல வருடங்களாக காணப்பட்ட சிறிய கோவில் போன்று அமைக்கப்பட்டு அதனுள் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையே இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்த சிறிய கோவிலின் மேற்பகுதி உடைக்கப்பட்டதோடு, அதனுள் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை வெளியில் எடுத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

 

குறித்த வீதியூடாக  செவ்வாய்க்கிழமை காலை பயணித்த மக்கள் குறித்த சிலை உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதை கண்டு உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தியுள்ளதோடு, மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

குறித்த சிலை ஏற்கனவே இரண்டு தடவைகள் உடைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சிலை புதுப்பித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்றாவது தடவையாக உடைக்கப்பட்டுள்ளமை இந்து மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இதேவேளை நாயாற்று வழி மற்றும் செம்மண் தீவு பகுதிகளில் உள்ள பிள்ளையார் சிலைகளும்  திங்கட்கிழமை இரவு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அண்மைக் காலங்களாக மன்னார் மாவட்டத்தில் மதச்சிலைகள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருகின்ற போதும், பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்ற  போதும், சிலைகள் உடைப்பு தொடர்பில் இது வரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவுக்கு 66 இலட்சம் ரூபாவை செலுத்த நீதிமன்றம் உத்தரவு

wpengine

புத்தளம் தப்போவ பகுதியில் 220 இற்கும் மேற்பட்டோர் வௌ்ளம் காரணமாக நிர்க்கதி

wpengine

5,000 ரூபா கொடுப்பனவு வழங்க முடியும் என்று தான் நினைக்கவில்லை இராஜாங்க அமைச்சர் தயாசிறி

wpengine