பிரதான செய்திகள்

மன்னாரில் மழை! பல விவசாயிகள் பாதிப்பு! நடவடிக்கை எடுக்காத அரச அதிகாரிகள்

கடந்த சில நாட்களாக மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பெரிய, சிறிய மற்றும் நடுத்தர குளங்கள் அனைத்தும் நிறைந்து வான் பாய்வதால் குள நீர் அனைத்தும் விவசாய நிலங்கள் மற்றும் தோட்ட காணிகளுக்குள் நிறைந்துள்ளன.


இதனால் பல இலட்சம் பெறுமதியான வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மாந்தை மேற்கு, நானாட்டான், மடு, முசலி பிரதேச செயலக பிரிவுக்கு உற்பட்ட பகுதிகளில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.

தொடர்சியாக நீர் வடிந்தோட முடியாத நிலையில் வயல் நிலங்களுக்குள்ளே தேங்கி காணப்படுவதால் அனைத்து முளை நிலையில் உள்ள பயிர்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

சொந்த தேவைக்கு கூட நெல் பெற்று கொள்ள முடியாத நிலை உள்ளதாகவும், இதனால் பல இலட்சம் செலவு செய்த நிலையில் தற்போது அனைத்தையும் இழந்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்வந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவரண உதவிகளையாவது வழங்குமாறு பாதிக்கப்பட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் நானாட்டான் பிரதேச சபைகுட்பட்ட கட்டைகாடு பகுதியை சேர்ந்த ஐந்து குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இடம் பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Related posts

மன்னார் நகர சபையின் புதிய அலுவலக மாடிக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு

wpengine

ஆளுங் கட்சியின் தலைவராக ஏர்டோவான்

wpengine

அசுத்தமான நீரை குடிநீராக மாற்றும் நிகழ்வு! நிராகரிக்கப்பட்ட ஹக்கீம்

wpengine