பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னாரில் பெரும்போக செய்கை! 19ஆம் திகதி தீர்மானம்

கட்டுக்கரை குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நெற்பயிர்ச்செய்கை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று புதன் கிழமை மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் மன்னார் பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம் பெற்றது. அதில் விவசாய அமைப்புக்கள், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கட்டுக்கரை குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள பெரும்போக நெற்பயிர்ச் செய்கை தொடர்பில் ஆராயும் கூட்டம் கடந்த மாதம் 19 ஆம் திகதி இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடை முறைப்படுத்த முடியாத சூழ் நிலையில், தொடர்ச்சியாக வரட்சி நிலை காணப்பட்டது. இதனால் விவசாயிகள் விதைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில், அவற்றை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டது. இந்த நிலையில் இன்று  புதன் கிழமை மாலை மீளாய்வு கூட்டம் இடம் பெற்றது.

விவசாய மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாகவும், நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாகவும், திகதியில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு அமைவாக வாய்க்கால் துப்பரவு செய்து நீர் விநியோகிக்கின்ற முதலாவது நாளாக எதிர் வரும் 13 ஆம் திகதி அமையும்.

கால் நடைகள் கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நெல் அறுவடையாக எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 14 ஆம் திகதி   இறுதி அறுவடை இடம் பெறும். இதன் போது கால் நடைகளை மீள கொண்டு வரும் திகதியாக எதிர் வரும் மே மாதம் 1 ஆம் திகதி கால் நடைகளை மீள கொண்டு வர முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக உரிய காலப்பகுதிக்குள் பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

எனவே குறித்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அதனை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தீர்மானங்களை பின்பற்றாத விவசாயிகள் தொடர்பாக உரிய அமைப்புக்கள் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

Related posts

வவுனியா வடக்கு கல்வி வலய இளம் பாடசாலை அதிபரின் பாலியல் துஷ்பிரயோகம்

wpengine

யானை சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னத்தை பயன்படுத்துவது சிக்கல் இல்லை ரணில்

wpengine

ஊடக நிறுவனங்களுக்கும் , ஊடகவியலாளர்களுக்குமான பாதுகாப்பினை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் : மீரா அலி ரஜாய்

wpengine