பிரதான செய்திகள்

மன்னாரில் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மன்னாரில் நேற்று புதன் கிழமை மாலை  பெய்த  மழையின் காரணமாக மன்னாரில் தாழ்வு பிரதேசத்தில் காணப்படும் பல குடியிருப்பு பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

 

குறிப்பாக அண்மையில் காணி வழங்கப்பட்டு குடியமர்த்தப்படட சில கிராமங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் , ஜீவபுரம், ஜிம்ரோன் நகர் , எமில் நகர் போன்ற கிராமங்களில் உள்ள  வீடுகளும் , பாதைகளும் நீரில் மூழ்கி காணப்படுகின்றன.

இதனால் குறித்த கிராமங்களில் உள்ள பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக மழை நீடித்தால் குறித்த கிராமங்களில் உள்ளவர்கள் இடம் பெயர வேண்டிய சூழ் நிலையும் ஏற்படும் என தெரிய வருகின்றது.

Related posts

புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகளை பெரியபள்ளிவாசல் வழிநடத்த வேண்டும் -நவவி

wpengine

வஸீம் தாஜுதீன் அநுர சேனாநாயக்க பிணையில் விடுதலை

wpengine

பள்ளமடு வீதியினை திறந்து வைத்த அமைச்சர் றிஷாட் , டெனிஸ்வரன்

wpengine