பிரதான செய்திகள்

மன்னாரில் பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்! இருவர் கைது

மன்னார் – சௌத்பார் புகையிரதவீதி பகுதியில் பல இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் மன்னார் ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேகநபர்கள் நேற்று இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 923 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் தலைமன்னார் பகுதியை சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் பல இலட்சம் ரூபா பெறுமதியானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சிவசக்தி ஆனந்தனின் மூன்றாவது தடவையாகவும் மூன்று பொலிஸ் விசாரணை

wpengine

வாட்ஸ் அப்பில் அறிமுகமாகவுள்ள அசத்தலான புதிய அப்டேட்ஸ்!

wpengine

“பிரதமரை சந்திக்கின்றோம்” – முன்னாள் அமைச்சர் ரிஷாட்!!!

wpengine