பிரதான செய்திகள்

மன்னாரில் பதுக்கி வைத்திருந்த ஒரு தொகுமி அங்கர் பால்மா பெட்டிகளை மீட்டுள்ளனர்.

மன்னார் – பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அங்கர் பால்மா வை பதுக்கி வைத்து வியாபாரம் மேற்கொண்ட வர்த்தக நிலையத்திலிருந்து நேற்று மாலை ஒரு தொகுதி அங்கர் பால்மா பெட்டிகளை மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபைக்கு நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

மன்னார் பஜார் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்று சோதனைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த வர்த்தக நிலையத்தில் பதுக்கி வைத்திருந்த ஒரு தொகுமி அங்கர் பால்மா பெட்டிகளை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவு சரியாக வழங்கப்படும்.

wpengine

ரணிலுக்கு எதிரானவர்களை மொட்டுகட்சியில் இருந்து நீக்க ரணில் நடவடிக்கை! பதவிகள் வழங்க நடவடிக்கை

wpengine

கல் வீச்சு காட்டு மிராண்டித்தனமானது வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன் கண்டனம்!

wpengine