தேசிய ரீதியில் கொண்டாடப்படும் கிறிஸ்து பிறப்பு மற்றும் ஒளிவிழா நிகழ்வு இந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி 2018ஆம் ஆண்டுக்கான தேசிய நத்தார் விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வர்த்தகம், நுகர்வோர், கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சும், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்யும் இந்த நத்தார் கொண்டாட்டம் நாளைய தினம் மாலை 3 மணிக்கு மன்னார் நகரசபை விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.
இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஆயர்வின்ஸ்டன் பர்னாந்து ஆண்டகை மற்றும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பர்னாந்து ஆண்டகை ஆகியோரின் பங்கு பற்றுதலில் விழா இடம்பெறவுள்ளது.
இதில் இலங்கை முழுவதிலும் இருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.