பிரதான செய்திகள்

மன்னாரில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடனும் வைத்திய ஆலோசனைகளுக்கு அமைவாகவும் செயற்பட வேண்டும் என மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று அவர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட கிராமங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை சற்று அதிகரித்து காணப்படுகின்றது.

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2018ஆம் ஆண்டு 156 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவ் எண்ணிக்கையானது கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாக காணப்பட்டாலும், தொடர்ச்சியாக நாங்கள் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

குறிப்பாக கடந்த டிசம்பர் மாத காலப்பகுதியில் மன்னார் நகரப்பகுதியில், பனங்கட்டுக்கோட்டு மற்றும் எமிழ் நகர் பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.

குறித்த டெங்கு நோயின் தாக்கத்தினால் 06 வயது சிறுமி ஒருவரும் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

குறித்த இறப்பு தவிர்த்திருக்க வேண்டியது. மிகவும் காலம் தாழ்த்தி வைத்தியசாலையில் அனுமதித்ததன் காரணமாகவே இறப்பு நிகழ்ந்துள்ளதாக கருத இடம் உள்ளது.

தற்போது பனங்கட்டுக்கோட்டு, எமிழ் நகர் பகுதிகளில் பாரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், பொது மருத்துவ மாதுக்கள் மற்றும் ஏனையவர்களின் ஒத்துழைப்புடன் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்ச்சியாக டெங்கு நோய் பரவாமல் இருக்க தோட்டவெளி, பேசாலை, எருக்கலம்பிட்டி போன்ற பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடையாமல் இருக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Related posts

சமாதான ஓவியத்திற்காக ஜனாதிபதி பாராட்டு பெற்ற காத்தான்குடி ஓவியர் மாஹிர்

wpengine

வட மாகாண முஸ்லிம் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்

wpengine

மைக்ரோசோப்ட் நிறுவனத்தின்ஸ்தாபகரான பில்கேட்ஸ் விலகினார்.

wpengine